தமிழ்நாடு
தமிழகத்தில் 25 லட்சம் வீடுகள் கழிவறை வசதி: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் 25 லட்சம் வீடுகள் கழிவறை வசதி: பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 25 லட்சம் வீடுகள் கழிவறை வசதி பெற்றுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 3 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திற்கும் அதிகமான வீடுகளில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்திலும் கழிவறைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. 2014ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வரை தமிழகத்தில் கழிப்பறை வசதி இருந்த வீடுகள் 46.22 லட்சம் ஆகும். ஏறக்குறைய 47 லட்சம் வீடுகளில் மட்டுமே கழிவறை வசதிகள் பெற்றிருந்தன. ஆனால் இன்றைக்கு 72 லட்சம் வீடுகள் கழிவறை வசதியுடன் உள்ளன” என்று கூறியுள்ளார்.

