\
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் அலையில் பலதரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி கொரோனா பாதிப்பு விகிதமும் இறப்பு விகிதமும் ஏறிக்கொண்டே வருகிறது. இரண்டாம் அலையில் பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

அந்த வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா தொற்று உறுதியான அவருக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com