தமிழ்நாடு
காளைகளை அவிழ்த்து விடுவது ஒருவகை போராட்டம்தான்: பொன். ராதாகிருஷ்ணன்
காளைகளை அவிழ்த்து விடுவது ஒருவகை போராட்டம்தான்: பொன். ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி காளைகள் அவிழ்த்துவிடப்படுவது, ஜல்லிக்கட்டு அல்ல என்றும் அது ஒரு வகையான போராட்டமே என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை அனுமதித்தது அந்த மாநில அரசின் நிலைப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஏற்று ஜல்லிக்கட்டை தடுக்கிறார்கள் என்றால் அது இந்த மாநில அரசினுடைய நிலைப்பாடு என்று கூறிய அவர் தடையை மீறி இன்று எங்கும் ஜல்லிக்கட்டு நடக்கவில்லை என்றார்.
தமிழகத்தில் பல இடங்களில் தடையை மீறி காளைகள் அவிழ்த்துவிடப்படுவது ஜல்லிக்கட்டு அல்ல என்றும் ஒரு வகையான போராட்டம் என்றும் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.