\
பொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்

பொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்

பொன்.ராதாகிருஷ்ணனுடன் 10 நிமிடம் தனியாக பேசிய ஓபிஎஸ்
Published on

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை விமான நிலையத்தில் 10 நிமிடம் தனியாக பேசினார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்திருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு டெல்லி திரும்பினார். ஆளுநர் பன்வாரிலால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ஆகியோர் வெங்கையா நாயுடுவை வழியனுப்பி வைத்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் வெங்கையநாயுடுவுக்கு பூங்கொத்து கொடுத்தனர். வெங்கையாநாயுடு சென்றதை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார். 

இதற்கிடையில், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒ.பன்னீர்செல்வம் சுமார் 10 நிமிடங்கள் வரை தனியாக கலந்துரையாடினார். மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் இருந்தும், பொன்.ராதாகிருஷ்ணனுடன் ஒபிஎஸ் பேசிய போது அவர்கள் உடன் இருக்கவில்லை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com