“கொடநாடு விவகாரத்தில் மர்மம் உள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்

“கொடநாடு விவகாரத்தில் மர்மம் உள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்

“கொடநாடு விவகாரத்தில் மர்மம் உள்ளது” - பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

கொடநாடு விவகாரத்தில் மர்மம் இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரியில் மத்திய அரசின் ‘உஜ்வாலா யோஜனா’ திட்டத்தின்கீழ் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்களை மக்களுக்கு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கொடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக நினைக்கிறேன். இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போது கொடநாடு வீடியோ வெளிவரவேண்டிய அவசியம் என்ன? இதில் மர்மம் உள்ளது. அந்த மர்மம் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.

தேர்தல் வரும்போது மர்மம்? என வருவதன் பின்னணியில் யார் உள்ளார்கள் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். கொடநாடு விவகாரத்தின் பின்னணியில் ஒரு பெரிய வலை பின்னப்பட்டுள்ளது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பாஜகவின் கூட்டணி மக்களவை தேர்தலில் 75 சதவீத இடங்களை கைப்பற்றும் வலுவான கூட்டணியாக அமையும். திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் வாக்கு வங்கி 1 சதவீதம் தான் இருக்கும். மக்களால் புறந்தள்ளப்பட்ட கட்சிகள் தான் அவை. 

பாஜக எந்தக் கட்சியுடன் கூட்டணி பேர்ச்சுவார்த்தை வைத்தாலும் அதை வெளிப்படையாக பேசும். கூட்டணி குறித்து பேச தயக்கம் காட்டவேண்டிய அவசியம் இல்லை. சட்டசபை கூட்டத்தில் சரியாக நடக்காதவர்கள், கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியாது என நினைத்ததால், பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைத்து திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தை நடத்தி வருகிறார். பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற டிரைனிங் எடுத்து வருபவர்களுக்கு வாழ்த்துக்கள்” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com