"யாருக்கு பின்னடைவு என இப்போது ஆராய விரும்பவில்லை" - பொன் ராதாகிருஷ்ணன்
சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணாமலை வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர் வருவதற்கு முன்பாகவே கூட்டம் தொடங்கப்பட்டது. அண்ணாமலை ஏறத்தாழ 11.50 மணியளவில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அவர், “உங்களிடையே மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். 3 ஆம் தேதியில் நடக்க இருந்த நிகழ்வு, நான் வரமுடியாத காரணத்தாலும் வேறு மூத்த தலைவர்களுக்கு முக்கிய பணி இருந்த காரணத்தினாலும் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் பாஜக மூத்த தலைவர்கள்ஹெச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் போன்றோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முழு காணொளியும் செய்தியில் உள்ள இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது.