போராட்டத்தை கைவிட பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

போராட்டத்தை கைவிட பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

போராட்டத்தை கைவிட பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை
Published on

போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மக்கள் முன்வரவேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளதால் அலங்காநல்லூரிலும், மாநிலத்தின் ஏனைய பகுதிகளிலும் இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், போராட்டத்தைக் கைவிட்டு விட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மக்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் உலகம் வியக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com