நெடுவாசலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே; குழப்பமடைய வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

நெடுவாசலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே; குழப்பமடைய வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்

நெடுவாசலில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே; குழப்பமடைய வேண்டாம்: பொன்.ராதாகிருஷ்ணன்
Published on

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நெடுவாசல் போராட்டக்குழுவினரிடம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளது போன்று, மக்களின் ஆதரவில்லாமல், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டது என தாம் நம்புவதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுடன் கையொப்பம் இடப்படுவதாகவும், பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். எனவே, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து என்ற செய்தியை வைத்து யாரும் குழப்பமடைய வேண்டாம் என கேட்டுக் கொள்வதாகவும், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com