தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் அல்ல...பொன். ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு தடைக்கு பீட்டா காரணம் அல்ல...பொன். ராதாகிருஷ்ணன்
ஜல்லிக்கட்டு தடைக்கு காரணம் காங்கிரஸ் கட்சியே தவிர, பீட்டா அமைப்பு அல்ல என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்பது ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் என மத்தய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதில் பீட்டா அமைப்பை விட காங்கிரஸ் கட்சிக்குத் தான் முக்கிய பங்கு உள்ளது என குற்றம்சாட்டினார்.