பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு
ரயில்வே ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிலை கடத்தல் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல் ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். சிலை கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல் தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், சிலை திருட்டு புகார்களை விசாரிக்க, ஐ.பி.எஸ். அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்தும், இந்த வழக்குகளை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிடப்பட்டது. இதனை உச்சநீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு பாராட்டு தெரிவித்தது. இந்நிலையில், பொன். மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., தமிழ்சந்திரன், திருச்சி ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.