போளூர்: கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட திமுக தொண்டர்கள்; ஒருவர் பலி!

போளூர் அருகே திமுக சார்பில் கொடி கம்பம் நட்டபோது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு. மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.
திமுக கொடி வைக்கப்பட்ட இடம்
திமுக கொடி வைக்கப்பட்ட இடம்புதிய தலைமுறை

போளூர் அருகே திமுக சார்பில் கொடி கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு. மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி.

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த கிழக்கு மேடு என்ற பகுதியில், கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கட்சியினர் கொடிகம்பம் நட்டனர். அதில் கொடிகம்பத்தின் உச்சியானது மேலே இருந்த மின்கம்பத்தில் பட்டதனால், அதில் மின்சாரம் பாய்ந்து ஐந்து பேர் தூக்கி வீசப்பட்டனர். அதில் ரகுராமன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கோதண்டராமன் மணி ராஜுவ், அப்துல் என்ற நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com