\
சென்னையில் காவலர்கள் வாகன பேரணி

சென்னையில் காவலர்கள் வாகன பேரணி

சென்னையில் காவலர்கள் வாகன பேரணி
Published on: 

தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தினை அடுத்து மக்கள் மத்தியில் எழுந்துள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினர் வாகனப் பேரணி நடத்தினர்.

சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் சமூக விரோத சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தப் பேரணி நடத்தப்பட்டது. சென்னையில் உள்ள ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டுவதாக வந்த புகார்களை அடுத்து மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் பாதுகாப்பை உறுதி செய்ய உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், ஓய்வு விடுதிகள் போன்றவற்றில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், குற்றச்செயல்களில் தொடர்புடையோர் தங்கியிருக்கிறார்களா என்பது குறித்து தணிக்கை செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தவிர சென்னை மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com