\
நாடு முழுவதும் 20 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: உ.பி இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு

நாடு முழுவதும் 20 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: உ.பி இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு

நாடு முழுவதும் 20 ஆயிரம் கி.மீ சைக்கிள் பயணம்: உ.பி இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு
Published on

மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக இந்தியா முழுவதும் 20 ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இளைஞருக்கு மதுரையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியாவைச் சேர்ந்தவர் சத்யஜித் பதக் (35). இவர், இந்தியா முழுவதும் உலக அமைதி மற்றும் மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அலகாபாத்தில் இருந்து புறப்பட்ட இவர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, பாண்டிச்சேரி வழியாக தமிழ்நாடு வந்தடைந்தார், இதையடுத்து காஞ்சிபுரம், திருச்சி வழியாக இன்று மதுரைக்கு வந்தார்.

20 ஆயிரம் கிலோ மீட்டர், மாசுக்கட்டுப்பாடு விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இவர், இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் காந்தி மியூசியம் ஆகியவற்றை தரிசனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்தியஜித் பதக் அவர்களுக்கு காந்தி மியூசியத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com