தமிழ்நாடு
விக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு
விக்கிரவாண்டியில் 84 சதவீதத்தை தொட்ட வாக்குப்பதிவு
தமிழகத்தில் இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி, காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளில் ஒருசில அசம்பாவிதங்களை தவிர வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெற்றது.
வாக்குப்பதிவு முடிந்த பின்னர் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இடைத்தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்துள்ளது. நாங்குநேரியில் 66.10 சதவீதமும், விக்கிரவாண்டியில் 84.36 சதவீதமும் வாக்குப்பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.