\
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ! ஐந்தாவது நபர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ! ஐந்தாவது நபர் கைது

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் ! ஐந்தாவது நபர் கைது
Published on

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படமெடுத்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் 5-வது நபராக மணிவண்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரிக்க உள்ளது.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிசிஐடி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com