பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு
பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: திருநாவுக்கரசுக்கு காவல் நீட்டிப்பு

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத் தியது. இந்த சம்பவம் தொடர்பாக திருநாவுக்கரசு உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த‌ 15ஆம் தேதி முதல் 4 நாட்கள் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று மாலை வரை கால அவகாசம் இருந்தும் முன்ன தாகவே காலையில் நீதிபதி வீட்டில் திருநாவுக்கரசை காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். 

அப்போது திருநாவுக்கரசை நாளை வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜன் உத்தரவிட்டார். இதனால் கோவை மத்திய சிறையில் அவர் மீண்டும் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு வீட்டில் சிபிசிஐ காவல்துறையினர் நேற்று இரண்டாவது முறையாக சோதனை நடத்தினர். அப்போது பாலியல் தொடர்பான வீடியோக்களில் உள்ள அடையாளங்களைக் கணக்கீடு செய்து கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com