\
பொள்ளாச்சி: மர்மமான முறையில் இறந்த பெண் யானை - வனத்துறை விசாரணை

பொள்ளாச்சி: மர்மமான முறையில் இறந்த பெண் யானை - வனத்துறை விசாரணை

பொள்ளாச்சி: மர்மமான முறையில் இறந்த பெண் யானை - வனத்துறை விசாரணை
Published on

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் வனப்பகுதியில் பெண் யானை உயிரிழந்த காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆழியார் வனப்பகுதியான உருலகுளிபள்ளம் பகுதியில் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் 46 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்ததை கண்டு வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்த பெண் யானையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உயிரிழந்த யானையை மருத்துவ குழுவினர் அதே இடத்தில் உடற்கூறு ஆய்வு செய்தனர். யானை நோய்வாய்ப்பட்டு இறந்ததா இல்லை காட்டு யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இறந்ததா என உடல்கூறு ஆய்வின் முடிவுகள் வந்த பிறகே தெரியவரும் என வனத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com