\
பொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்

பொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்

பொள்ளாச்சி கொடூரம் - கைதான 4 பேர் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குண்டர் சட்டத்தில் கைதான 4 ‌பேர், சென்னையில் உள்ள அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ் குமார், சபரிராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறது. அதேபோல், வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரவு உள்ளிட்ட 4 பேரும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு அறிவுரைக் கழக தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ராமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும், மீண்டும் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com