\
பொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ

பொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ

பொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ
Published on

பொள்ளாச்சி அருகே நண்பரின் மகளை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட இருவர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டது. 

பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி என்பவரும், அவரது நண்பன் முருகேசன் என்பவரும் நேற்று முன்தினம் தங்களுடைய நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தனர். அப்போது விளையாடிக் கொண்டிருந்த 5 வயது குழந்தையை தூக்கி சென்ற கார்த்தி, மறைவான இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குழந்தையை காணவில்லை என்பதால் முருகேசனிடம் கார்த்தி குறித்து உறவினர்கள் கேட்டதும், அவர் அங்கிருந்து ஓடியுள்ளார். 

இதையடுத்து கார்த்தியை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, போலீசில் ஒப்படைத்தனர். அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, தப்பியோடிய முருகேசனை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த கார்த்தி மற்றும் அவரது கூட்டாளி முருகேசன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com