\
பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி
Published on

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் முக்கிய குற்றவாளி என சொல்லப்படும், திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் 4 பேர், பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களை மிரட்டியதாக 4 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படுபவர் திருநாவுக்கரசு. இந்நிலையில் திருநாவுக்கரசுவுக்கு ஜாமீன் கோரி அவரது தாயார் செல்வி பொள்ளாச்சி நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தார். இந்நிலையில் திருநாவுக்கரசுவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திருநாவுக்கரசு உட்பட நான்கு குற்றவாளிகளையும் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கோவை ஆட்சியர் ராஜாமணி உத்தரவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com