ops thirumavalavan annamalai
ops thirumavalavan annamalaipt desk

13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை – ஓபிஎஸ், திருமாவளவன், அண்ணாமலை வாழ்த்து!

13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், திருமாவளவன், அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Published on

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் - “நடுநிலையோடு செய்திகளை முந்தித் தருவதில் முதன்மை தொலைக்காட்சியாக விளங்கும் புதிய தலைமுறை தனது வெற்றிப் பயணத்தைத் தொடர இதய பூர்வமாக வாழ்த்துகிறேன்” என்றார்.

விசிக தலைவர் திருமாவளவன்: “விளிம்பு நிலை மக்களின் குரலாக புதிய தலைமுறை ஒலிக்கத் தொடங்கி, இன்று ஏழை எளியோர் பிரச்னைகளை வெகுவாக பேசுகிற ஒரு தொலைக்காட்சியாக சிறந்து விளங்குகிறது. புதிய தலைமுறை மேலும் வளர வேண்டுமென்று நெஞ்சார வாழ்த்துகிறேன்” என்றார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “உண்மையின் உரைக்கல்லாக கொண்டு திறம்பட செயலாற்றும் புதிய தலைமுறையின் வெற்றிப் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடரட்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com