\
பத்திரிகையாளர் மோகன் நினைவேந்தல் கூட்டம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு

பத்திரிகையாளர் மோகன் நினைவேந்தல் கூட்டம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு

பத்திரிகையாளர் மோகன் நினைவேந்தல் கூட்டம்: அரசியல் கட்சியினர் பங்கேற்பு
Published on

மறைந்த பத்திரிகையாளர் மோகனின் நினைவேந்தல் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

சென்னை லயோலா கல்லூரியில் நடந்த மறைந்த பத்திரிக்கையாளர் மோகனின் நினைவேந்தல் கூட்டத்தில், நக்கீரன் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் உள்ளிட்டோர்‌ பங்கேற்றனர். மேலும், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, மதிமுகவின் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டு மறைந்த பத்திரிகையாளர் மோகனுக்கு புகழஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் கடிதத்தை கொடுத்து அனுப்பியிருந்தார். அதில் சமூக அக்கறையுடன் செய்தித்துறையில் தூய்மையாக பணியாற்றியவர் மோகன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com