\
அரசியல் கவிதை என்னுடையதல்ல: கமல்ஹாசன் மறுப்பு

அரசியல் கவிதை என்னுடையதல்ல: கமல்ஹாசன் மறுப்பு

அரசியல் கவிதை என்னுடையதல்ல: கமல்ஹாசன் மறுப்பு
Published on

தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து, நடிகர் கமல்ஹாசன் எழுதியதாக கவிதை ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அந்த கவிதை தன்னுடையதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

சிங்கமில்லாக் காடு என்ற பெயரில் நீளும் அந்தக் கவிதையில், ஜெயலலிதா மரணம் குறித்தும், சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றது குறித்தும் விவரிக்கப்பட்டிருக்கிறது. மேலும் முதலமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் பதவியை ராஜினாமா செய்தது பற்றியும், தமிழகத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போன்றும் அந்தக் கவிதை அமைந்திருக்கிறது. சமூக வலைத்தளங்களில் உலா வரும் அந்தக் கவிதை, தன்னுடையைதல்ல என நடிகர் கமல்ஹாசன் மறுத்துள்ளார். தான் தவறு செய்திருந்தால் ஒப்புக் கொள்வேன் என்றும், அந்த பதிவு தன்னுடையதல்ல என்றும் கமல்ஹாசன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com