கே.எஸ்.அழகிரி - துரைமுருகன் - வைகோ
கே.எஸ்.அழகிரி - துரைமுருகன் - வைகோபுதிய தலைமுறை

13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

13 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Published on

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “புதிய தலைமுறை என்ற பெயரே புரட்சிகரமான பெயர். புதிய தலைமுறை பல புதிய நிகழ்வுகளை கொண்டு வந்தது. புதிய தலைமுறையை வாழ்த்துகிறேன்” என்றார்.

அமைச்சர் துரைமுருகன், “கடும் போட்டிக்கு மத்தியில் உண்மையான செய்திகளை முந்தித்தந்து, மக்களுக்குத் தேவையான - மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை தந்து வருவதால் புதிய தலைமுறை தொலைக்காட்சி மேலும் வளர வாழ்த்துகள்” என்றார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “அரசியலை பொருத்தமட்டில் நடுநிலை தவறாமல் விருப்பு வெறுப்பின்றி நடுநிலையோடு செய்திகளை தரும் புதிய தலைமுறை தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்” என்றார்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com