\
நாளை மிலாது நபி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

நாளை மிலாது நபி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!

நாளை மிலாது நபி: அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!
Published on

மிலாது நபி நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

உலகில் அன்பு பெருகி, அமைதி தவழ்ந்து, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியுள்ளார். நபிகள் நாயகத்தின் சீரிய கருத்துகளை தினந்தோறும் பின்பற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரும் மிலாது நபி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com