தினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தினத்தந்தி பவளவிழா: அரசியல் தலைவர்கள் வாழ்த்து
Published on

தினத்தந்தி நாளிதழ் பவள விழாவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நாளை காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார்.

இந்நிலையில் தினத்தந்தி நாளிதழ் பவள விழாவிற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், சுயமரியாதைக்கும் வெளிச்சம் தரும் கைவிளக்காக தினத்தந்தி நாளிதழ் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது. நூற்றாண்டுகளை கடந்து தமிழினத்துக்காவும், அனைத்து சமுதாய சமத்துவத்துக்காகவும் தினத்தந்தி நாளிதழ் குரல் கொடுக்கட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், பாமர மக்களும் நாளேடு படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய சாதனை தினத்தந்தி நாளிதழையே சேரும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எளிய தமிழ், இனிய நடை, சுருக்கமான வரிகள் என்கிற புதிய உத்தியை பத்திரிகை உலகில் அறிமுகப்படுத்தி, அறிவு புரட்சியை ஏற்படுத்திய பெருமை தினத்தந்திக்கு உண்டு எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com