”கடன்ல வாங்குன படகு அது.. எப்படியாவது மீட்டுத்தாங்க..” - கண்ணீருடன் மீனவ குடும்பங்கள்!

”கடன்ல வாங்குன படகு அது.. எப்படியாவது மீட்டுத்தாங்க..” - கண்ணீருடன் மீனவ குடும்பங்கள்!
”கடன்ல வாங்குன படகு அது.. எப்படியாவது மீட்டுத்தாங்க..” - கண்ணீருடன் மீனவ குடும்பங்கள்!

தமிழக மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில், அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளுக்கு நாகை மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். மீனவர்களின் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த 16 மீனவர்களைக் கைது செய்தனர். கைதானவர்களில் 12 பேர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், 4 பேர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. சிறைப் பிடிக்கப்பட்ட மீனவர்கள், இலங்கை காரைநகர் கடற்படை முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் கூறுகையில், “எங்களோட படகுல 12 பேர் போயிருக்காங்க. அந்த படகை நாங்க கடன் வாங்கித்தான் வாங்கியிருக்கோம். இதனால் பேங்க் கடன் நிறைய இருக்கு. எங்க படகு அங்க போனா வராது. மத்திய, மாநில அரசுகள்தான் எங்க படகை எங்ககிட்ட கொண்டுவந்து கொடுக்கணும்” என்றார் மீனவப்பெண். மற்றொரு மீனவர் இதுகுறித்து பேசுகையில், ”இது தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கு. மத்திய மாநில அரசுகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் மத்திய, மாநில அரசுகள் உடனே விடுவிக்கணும். இது மீனவ மக்கள் மத்தியில பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். கைது நடவடிக்கை தமிழக மீனவர்களின் மரபுவழி உரிமைகளை பறிக்கும் செயல் என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில்,” இந்தியா மற்றும் இலங்கை இடையேயான உறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தமைக்கு வெளியுறவுத்துறை மற்றும் பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு பாஜக மற்றும் தமிழக மீனவர்கள் சார்பாக நாங்கள் மனதார நன்றி தெரிவிக்கிறோம். இதன் விளைவாக பெருங்கடலில் எங்கள் மீனவர்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மற்றும் நாகையைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது குறித்த தகவலை நேற்று தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறோம். மேலும் அவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை தலையிட்டு கைதிகளை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கிறோம்” என்று ய்ஹெர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com