“இருவருக்குமே இழப்புதான்” - அதிமுக, பாஜக கூட்டணி முறிவு குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன்!

2024 தேர்தலைப் பொறுத்தவரை இருவருக்குமே இழப்பு தான் என அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணாமலை வரும் முன்பே வந்தே மாதரம் பாடல் பாடி கூட்டம் தொடங்கப்பட்டது. இக்கூட்டத்தில் தேசிய மேலிட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “கூட்டணி பிரச்சனை தொடர்பாக எனது நிலைப்பாட்டை பாஜக மேலிடத்தில் கூறிவிட்டேன். கூட்டணி குறித்த முடிவை டெல்லி தான் எடுக்கும். கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் அது அவர்களது விருப்பம்” என தெரிவித்திருந்தார்.

இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், “தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. தனித்து போட்டியிடுவது தமிழ்நாட்டிற்கு புதிதல்ல” என்றும் தெரிவித்திருந்தார். அனைத்து முடிவுகளையும் தேசிய தலைமை எடுக்கும் என்று அண்ணாமலை சொன்னதை பொன் ராதாகிருஷ்ணனும் வலியுறுத்தியிருந்தார்.

இதன் மூலம் பாஜக தனித்து போட்டியிட தயாராகிவிட்டது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமன் புதிய தலைமுறையிடம் தனது கருத்துகளை பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com