”அண்ணாமலை இப்படியே பேசினால் பாஜகவை குழிதோண்டிப் புதைத்துவிடுவார்!” - அரசியல் விமர்சகர் கலை!

அண்ணாமலை குறித்தும் அதிமுக-பாஜகவின் அடுத்த நகர்வு குறித்தும் கருத்து தெரிவித்திருக்கும் அரசியல் விமர்சகர் கலை, இப்படியே பேசினால் அண்ணாமலை பாஜகவை குழிதோண்டி புதைத்துவிடுவார் என குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் வேட்பாளராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக அறிவிக்க வேண்டுமென செல்லூர் ராஜூ வலியுறுத்தியுள்ள நிலையில், அதுபற்றி தம்மால் முடிவெடுக்க முடியாது என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்தும் அதிமுக - பாஜகவின் அடுத்தகட்ட நகர்வு எப்படி என்பது பற்றியும் அரசியல் விமர்சகர் கலை பேசியுள்ளார். அவரிடம், இபிஎஸ்-ஐ ஏன் அண்ணாமலை ஏற்க மறுக்கிறார். அதிமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்துவரும் வகையில் “அடுத்து என்ன செய்யும் பாஜக? இரண்டு கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும்?, எடப்பாடி பழனிசாமியை பாஜகவால் நிராகரிக்க முடியுமா ?, அண்ணாமலையை முதலமைச்சர் வேட்பாளராக்க முயற்சி எடுக்கப்படுமா?, அதிமுக - பாஜக பேச்சுவார்த்தைக்குப் பிறகு முடிவா? இல்லை கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாட்டைப் பொறுத்து அறிவிப்பா?” என பல கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசியிருக்கும் கலை, “அண்ணாமலை இப்படியே பேசினால் பாஜகவை குழிதோண்டிப் புதைத்துவிடுவார்” என விமர்சித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com