\
ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

ஜனவரி 31-ல் போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ல் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.

போலியோ நோயை ஒழிக்கும் விதமாக குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 31-ல் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்காக தமிழகத்தில்  43,051 முகாம்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட, கொரோனா பாதிக்காத குழந்தைகள் போலியோ சொட்டு மருந்து போட்டுக்கொள்ளலாம். அதேசமயம் தற்போது கொரோனா அறிகுறிகள் இருக்கும் குழந்தைகள் சொட்டு மருந்து போடுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com