\
காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை
காவலர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைweb

காவலர் சுட்டுக்கொண்டு தற்கொலை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக அதிர்ச்சி!

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்பாக பணியில் ஈடுபட்டியிருந்த காவலர் ஒருவர் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
Published on: 

உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

எழுமலை கோட்டைப்பட்டியை சேர்ந்த மகாலிங்கம் என்ற காவலர், உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்பாக இரவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளைpt web

அங்கிருந்த சககாவலர்கள் மகாலிங்கத்தை மீட்டு மருத்துவனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தற்கொலைக்கு யாரும் காரணமில்லை எனக் கூறி காவலர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com