தமிழ்நாடு
ரவுடிகளால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர்: முதல்வர் பழனிசாமி இரங்கல்!
ரவுடிகளால் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட காவலர்: முதல்வர் பழனிசாமி இரங்கல்!
தூத்துக்குடியில் இரட்டைக்கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்கச்சென்றபோது, நாட்டுவெடிகுண்டு வீசியதால் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், ” தூத்துக்குடியில் கொலை குற்றவாளிகளை பிடிக்க முயன்ற போது துரதிஷ்டவசமாக காவலர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டு அறிக்கையையும் வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் நிதியுதவியும் குடும்பத்திற்கு வேலையும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.