கோவையில் தமிழ்நாடு சிறப்பு காவல்படை எழுத்தராக பணியாற்றிய அமர்நாத், காவலர் முகாம் வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவை அடுத்த கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் எழுத்தராக பணியாற்றி வந்தவர் அமர்நாத். திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர், இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார். அமர்நாத் கடந்த சில தினங்களாகவே மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு பத்து மணி வரை அமர்நாத் பணியில் இருந்த நிலையில் இன்று காலை, அவர் முகாம் வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு சடலமாக இருப்பது தெரிவந்துள்ளது. இதனையடுத்து அமர்நாத்தின் உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அவைத்தனர். அமர்நாத் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.