குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய காவல் துறையினர்.
அரக்கோணம் அருகே மைனர் பெண்ணிற்கு நடைபெறவிருந்த திருமணத்தை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, பெண்ணிற்கு கவுன்சிலிங் அளித்தனர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரின் மகளுக்கு அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் திருமணம் நடைபெற இருந்தது. இதில் திருமணம் நடைபெறவிருந்த பெண் மைனர் என்ற தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரியவந்துள்ளது.
இதையடுத்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று இருவீட்டாரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது மணப்பெண் மைனர் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் திருமணத்தை நிறுத்தினர்.பின்னர் சமூக நல அதிகாரிகள் அந்த பெண்ணை மீட்டு குழந்தை திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், கல்வியின் அவசியம் பற்றியும் கவுன்சிலிங் அளித்தனர். பெண்ணின் பெற்றோருக்கும் தனியாக கவுன்சிலிங் அளிக்கப்பட்டது.