\
காவலர் அஜித்குமார்
காவலர் அஜித்குமார்முகநூல்

செங்கல்பட்டு | வடமாநில தொழிலாளியைத் தாக்கி 1000 ரூபாயை பறித்த காவலர் - உடனடியாக பாய்ந்த நடவடிக்கை!

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், வடமாநில தொழிலாளியைத் தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்த காவலர் கைது செய்யப்பட்டார்.
Published on

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், வடமாநில தொழிலாளியைத் தாக்கி ஆயிரம் ரூபாயை பறித்த காவலர் கைது செய்யப்பட்டார்.

திருப்போரூர் அருகே குன்னப்பட்டு கிராமத்தில் உள்ள ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்கிப் பணி புரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மானாமதி காவல் நிலைய காவலர் அஜித்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது வடமாநில தொழிலாளி ஒருவரை அடித்து துன்புறுத்தி அவரிடம் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்துள்ளார்.

காவலர் அஜித்குமார்
EXCLUSIVE | "திராவிட மாடலின் முன்மாதிரி ராமர்னு அமைச்சர் ரகுபதி சொல்றாரே?" - இடும்பாவனம் கார்த்திக்!

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் அளித்த புகாரின் பேரில் உயரதிகாரிகள் நடத்திய விசாரணையில், வடமாநிலத் தொழிலாளியை தாக்கி காவலர் அஜித்குமார் பணம் பறித்தது உண்மை எனத் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து மானாமதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com