\
காவலர் சங்கமா? - நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.

காவலர் சங்கமா? - நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.

காவலர் சங்கமா? - நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை.
Published on

காவலர் சங்கம் அமைப்பது, அவ்விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என
காவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

நீண்ட நாளாக காவல்துறையினர் சங்கம் வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது சமீபகாலமாக அதற்கான முயற்சிகளில் குறிப்பிட்ட சில போலீசார்
தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. காவல்துறையில் உள்ள சிலர் இவ்விவகாரம் தொடர்பாக ரகசியமாக ஆள் சேர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும்
போலீசாருக்கு என்று தனி சங்கம் அமைக்க கோரி முதல்வரை அவர்கள் குடும்பத்துடன் விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் சமூக வலைதளங்கில் தகவல் வெளியாகின.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன், இவ்வாறான முயற்சியில் இறங்கியுள்ளவர்கள் விரைவில் கண்டறியப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் காவலர் சங்கம் தொடர்பாக முதல்வரை யாராவது சந்தித்தாலோ, அதுகுறித்து ரகசிய கூட்டங்களை நடத்தினால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com