தமிழ்நாடு
எம்எல்ஏ-க்களை வெளியேற்ற முயற்சி: சுப்பிரமணியன் சுவாமி
எம்எல்ஏ-க்களை வெளியேற்ற முயற்சி: சுப்பிரமணியன் சுவாமி
கூவத்தூர் விடுதியில் உள்ள எம்எல்ஏக்களை போலீசார் மூலம் வலுக்கட்டாயமாக வெளியேற்றும் முயற்சிகள் நடப்பதாக பாஜகா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இது தொடர்பான தமிழக டிஜிபிக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் வலியுறுத்தியதாகவும் சுவாமி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது ஆதாரமற்ற புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். பழனிச்சாமி முதலமைச்சராவதை தாமதப்படுத்த இதுபோன்று நடைபெறுவதாகவும், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திடம் விளக்கியுள்ளதாகவும் சுவாமி தெரிவித்துள்ளார்.