\
சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேரிடம் விசாரணை

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேரிடம் விசாரணை

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேரிடம் விசாரணை
Published on

சிறார்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் தனிப்படை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்துகின்றனர்.

திருச்சியில் சிறார் ஆபாசப் படங்களை முகநூலில் பதிவேற்றம் செய்த புகாரில், ஏசி மெக்கானிக் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் சிறார் ஆபாசப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

செல்போன் எண்ணை வைத்து அவரை கைது செய்துள்ள தனிப்படை காவல்துறையினர், மேலும் பல தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com