தமிழ்நாடு
தஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை! காரணம் என்ன?
தஞ்சை அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை! காரணம் என்ன?
தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநீலக்குடி காவல்நிலையத்தில் பிரபு என்பவர் தலைமைக் காவலராக இருந்து வந்தார். நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்ற காவல்துறையினர், பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட பிரபு மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாக அவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பிரபு, சமீபத்தில் திருநீலக்குடி காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

