தமிழ்நாடு
காதலியை சுட்டுக்கொன்று போலீஸ் தற்கொலை.. பிறந்த நாளில் நடந்த சோகம்
காதலியை சுட்டுக்கொன்று போலீஸ் தற்கொலை.. பிறந்த நாளில் நடந்த சோகம்
விழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு காவலர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னையில் பணிபுரிந்து வந்த கார்த்திக், தனது காதலியின் பிறந்தநாளையொட்டி சொந்த ஊரான அன்னியூருக்கு சென்றுள்ளார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவரது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற இருவரும் சந்தித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றவே அப்போது ஆத்திரம் அடைந்த கார்த்திக், அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.
தகவலறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் அதிகாலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.