\
Police stations get Rs. 30,000 for daily expenses; here is the reason.
police stationani

காவல் நிலையங்களுக்கு நிதி உயர்வு! அன்றாட செலவுக்கு ரூ.₹30,000..! இதுதான் அந்தக் காரணம்!

காவல்துறைக்கு வழங்கப்படும் அன்றாட செலவுக்கான நிதியைப் பல மடங்கு உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிதி, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு என்ன? எவ்வளவு நிதி உயர்த்தப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கலாம்.
Published on: 

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

தமிழ்நாடு அரசின் கீழ் மாநிலம் முழுவதும் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. காவல்துறை, முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் துறைகளில் ஒன்று. இந்நிலையில், காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் எதிர்பாராச் செலவுகளைச் சமாளிப்பதற்காக வழங்கப்பட்டு வந்த நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

CM VIJAY
CM VIJAYCMOFTAMILNADU X PAGE

அரசின் அறிவிப்பின்படி, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதல், பொது அமைதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பணிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதனுடன், குற்றங்களைத் தடுத்தல் மற்றும் கண்டறிதல், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்குதல், இணையவழிக் குற்றங்களை எதிர்கொள்ளுதல் உள்ளிட்ட பணிகளும் தொடர்ந்து திறம்பட மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், காவல்துறையின் நிர்வாக மற்றும் செயலாக்கப் பணிகள் அதிகரித்து வருவதால், அதற்கான செலவினங்களும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் இதைக் கருத்தில் கொண்டு, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் அன்றாடம் ஏற்படும் செலவுகளைச் சமாளிப்பதற்காக எதிர்பாராச் செலவு நிதியை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிதி உயர்வின் மூலம் காவல் நிலையங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகளுக்கான செலவுகளை மேற்கொள்வதில் ஏற்படும் சிரமங்கள் குறையும் என்றும், இதற்காக அதிகாரப்பூர்வமற்ற நிதி ஆதாரங்களைச் சார்ந்திருக்கும் நிலை குறைவதுடன், ஊழலைத் தடுக்கவும் ஒழிக்கவும் வழிவகுக்கும் என்றும் அரசு விளக்கமளித்துள்ளது.

அரசாணை
அரசாணை tndpir

இதன்படி, மாநிலத்திலுள்ள காவல் நிலையங்கள், அங்கு பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கெனவே மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த எதிர்பாராச் செலவு நிதி, 3,750 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும், 6,000 ரூபாயிலிருந்து 40,000 ரூபாயாகவும், 8,250 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிதி உயர்வுக்காக ஆண்டுதோறும் 71 கோடியே 1 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இருப்பினும், இந்த நிதி எந்தெந்த செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படும், அதற்கான செலவுக் கணக்குகள் எவ்வாறு பராமரிக்கப்படும் என்பது தொடர்பான விரிவான விளக்கங்கள் அறிவிப்பில் இடம் பெறவில்லை,

Police stations get Rs. 30,000 for daily expenses; here is the reason.
தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தல்.. அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.. செங்கோட்டையன் அளித்த விளக்கம்!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com