`கையூட்டு தராததால் எங்களை கைது செஞ்சாங்க...’ வைரல் வீடியோவுக்கு பதிலளித்த காவல்துறை

`கையூட்டு தராததால் எங்களை கைது செஞ்சாங்க...’ வைரல் வீடியோவுக்கு பதிலளித்த காவல்துறை
`கையூட்டு தராததால் எங்களை கைது செஞ்சாங்க...’ வைரல் வீடியோவுக்கு பதிலளித்த காவல்துறை

சமூக வலைதளத்தில் பரப்பப்பட்ட வீடியோவின் உண்மை தன்மை குறித்து விசாரிக்க காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்ட நிலையில் அது உண்மைக்கு புறம்பானது என அறிக்கை வெளியிட்டுள்ளனர். சென்னை குரோம்பேட்டை, ராதா நகர் பிரதான சாலையில், சிட்லபாக்கம் போலீசார், இம்மாதம் 1ம் தேதி மாலை, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது செல்போனில் பேசியபடியே இருசக்கர வாகனத்தில் இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்திருக்கிறார். அவரை ரோந்து பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் சுரேஷ் தடுத்து நிறுத்தியதாகவும், வாகனத்தின் சாவியை எடுத்து வைத்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் சென்ற நபர், விக்னேஷ்வரன் (வயது 22) என்பவரையும் அவரது அண்ணன் சிலம்பரசன் (வயது 29) என்பவரை சம்பவ இடத்துக்கு வரவழைத்திருக்கிறார். அங்கு சென்ற சிலம்பரசனுக்கும், ஆயுதப்படை காவலர் சுரேஷிற்கும் தகராறு ஏற்பட்டது. சிலம்பரசன் தாக்கியதில் சுரேஷின் செயின் அறுந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து சிலம்பரசன் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோரை, சிட்லப்பாக்கம் போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றி வைரல் வீடியோ ஒன்று, கடந்த சில நாள்களாக சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. அதில் பேசிய மனோ என்ற வாலிபர், தானும் கைது செய்யப்பட்ட விக்னேஷ்வரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் இணைந்து புட்டு கடை நடத்தி வருவதாகவும், அங்கு காவலர் சுரேஷ் வழக்கமாக வந்து புட்டு வாங்கி சென்றதாகவும் கூறியுள்ளார். மேலும் “கடந்த வருடத்தில் ஒருமுறை, சுரேஷ் புட்டு கேட்ட போது, கடையில் வாடிக்கையாளர்கள் அதிகம் இருந்ததால் கொஞ்சம் தாமதமானது. அது நாள் முதல் சுரேஷ் கடையில் நெருக்கடி கொடுக்கத் தொடங்கினார். மாதா மாதம் மாமூல் கொடுக்கவும் வற்புறுத்தினார். அதனை கொடுக்க மறுத்தோம். இதை மனதில், வைத்துக் கொண்டு விக்னேஷ்வரன் மற்றும் சிலம்பரசன் ஆகியோர் மீது, பொய் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்துள்ளனர்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோவின், உண்மை தன்மை குறித்து, தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக, உயர் காவல்துறை அதிகாரிகள் விசாரிக்க உத்தரவிட்டிருந்தார். அதைத்தொடந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் `சிலம்பரசன் மீது ஏற்கனவே போலீசாரிடம் தகராறு செய்து ஒரு வழக்கு காவல் நிலையத்தில் உள்ளது. சுரேஷ் குமாரிடம் குடிபோதையில் தகராறு செய்து செயினை அறுத்ததால் தான் கைது செய்தது.

மற்றபடி காவலர்கள் இடியாப்பம், புட்டு போன்றவற்றை இலவசமாக அவர்களிடம் கேட்கவில்லை. அந்த வீடியோ உண்மைக்கு புறம்பானது’ என போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com