'முன் வச்ச கால பின் வைக்க மாட்டான் தமிழன்'.... ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக காவலர் உரை
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தி காவலர் ஒருவர் உரையாற்றினார். அவரின் உரைக்கு இளைஞர்கள் வரவேற்றுள்ளனர்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நான்காவது நாளாக இன்று தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் போராடும் இந்த போராட்டத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அப்போது காவலர் ஒருவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவு உரையாற்றினார்.
அந்த காவலர் தன் உரையில், ’ இது வரைக்கும் எந்த போராட்டத்திலும் போலீசார்கள் பங்கேற்றது இல்லை. இன்று நான் பேசுகிறேன் என்றல், இப்போராட்டத்தில் முக்கயத்துவம் கருதிதான். எனவே இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மண்ணில் தான் காந்தியும், நேதாஜியும் பிறந்தார்கள். தமிழனுக்கு ஒரு கேட்ட பழக்கும் இருக்கு, முன் வச்ச கால பின் வைக்க மாட்டான். இந்த கூட்டத்தில் நிறைய போலீசார் உள்ளனர். அவர்களுக்கும் ஆதரவாக பேச வேண்டும் என்ற ஆதங்கம் இருக்கும். என்றார்.