ரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு

ரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு

ரவுடியுடன் பிறந்தநாள் கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க உத்தரவு
Published on

ஆள்கடத்தல், சங்கிலிப் பறிப்பு கும்பலுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய உதவி ஆய்வாளரை விசாரிக்க மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கலால் பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர் ஏற்கெனவே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு பிரிவில் பணியாற்றியவர். இந்நிலையில் கடந்த மே மாதம் 3-மே தேதி தனது பிறந்த நாளை வேலூர் ஆயுதபடை வளாகக்திற்கு அருகில் உள்ள கஸ்பா பகுதிக்கு செல்லும் வழியில் நள்ளிரவு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்தப் பிறந்த பிறந்த நாள் விழாவில் சில காவலர்கள் உடனிருந்தனர். 

மேலும் இவ்விழாவில் வேலூரில் சங்கிலிப் பறிப்பு, ஆள்கடத்தல் வழக்கில் தொடர்புடைய வேலூர் தொரப்பாடியை சேர்ந்த கருப்பு ஜெகதீஷ், ஸ்கெச் பரத், தமீம் ஆகியோர் கலந்து கொண்டு உதவி ஆய்வாளர் செல்வராஜூக்கு பொன்னாடை போர்த்தி கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் சில தினங்கள் முன்பு வெளிவந்தது.
 
இதனால் அதிர்ச்சியடைந்த வேலூர் மாவட்ட காவல்துறை இது தொடர்பாக உதவி ஆய்வாளர் செல்வராஜூடம் விசாரித்து அறிக்கை அளிக்க வேலூர் மாவட்ட எஸ்.பி பிரவேஷ் குமாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com