கைது செய்யச் சென்ற போது தாக்கிய ரவுடி..சுட்டு பிடித்த போலீசார் - மதுரையில் நடந்த பரபரப்பு சம்பவம்

மதுரையில் போலீசாரை தாக்கிய ரவுடியை போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடி ஸ்டீபன்ராஜை சுட்டு பிடித்த போலீஸ்
ரவுடி ஸ்டீபன்ராஜை சுட்டு பிடித்த போலீஸ்file image

தமிழகத்தில் தற்போது மது, கஞ்சா போதையால், இளைஞர்கள், சிறுவர்கள் என பலரும் போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் சம்பவங்களான கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றசம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைக் கட்டுப்படுத்த தமிழக போலீசாரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், கடந்த மாதம் கிண்டி ஆளுநர் மாளிகையின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில்  போலீசார் விரைந்து செய்யப்பட்டு  பெட்ரோல்  குண்டு வீசிய கருக்கா வினோத் என்ற ரவுடியை அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதற்கு முன்பு சென்னையில் ஆட்டோவில் பட்ட கத்தியுடன்  சுற்றித் திரிந்த ரவுடியயை திரைபடப்பணியில் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

ரவுடி ஸ்டீபன்ராஜை சுட்டு பிடித்த போலீஸ்
"நம்பர் 1 வீரராக இருப்பதை விட உலகக்கோப்பை வெல்வது தான் எனது குறிக்கோள்!" - முகமது சிராஜ்

இந்தநிலையில் குற்றவாளிகளை  போலீசார் கைது  செய்யச் செல்லும் போது பாதுகாப்புகளை மீறி  போலீசார்  தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றது. போலீசாரும்  தற்காப்பிற்காகத் துப்பாக்கியால் சுட்டு ரவுடியை பிடித்து வருகின்றனர். 

இந்த சூழலில் தற்போது மதுரையில் அருகே கடந்த 2  நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிக்க முற்பட்ட போது அந்த பெண் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில்  போலீசார்  சிசிடிவி கட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வந்துள்ளனர்.  போலீசாரின் விசாரணையில் மதுரை அருகே உள்ள செல்லூரில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய  ஸ்டிபன்ராஜ்  என்பது தெரியவந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்யச் சென்ற போலீசாரை ஸ்டிபன்ராஜ் தாக்கியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த காவல் ஆய்வாளர் தற்காப்பிற்காக  ஸ்டிபன்ராஜ் காலின்  முட்டிக்குக் கீழ் 2 முறை  சுட்டுப்  பிடித்துள்ளனர். இதில் காயமடைந்த ஸ்டிபன்ராஜ் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் ஸ்டிபன்ராஜ் தாக்கியதில் காயமடைந்த காவலரும் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

போலீசரை தாக்கிய ரவுடியை தற்காப்பிற்காக போலீசார் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com