
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
சென்னை ராயபுரம் ஏஏ சாலையில நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த இருவரை தடுத்து நிறுத்திய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். அப்போது வாகனத்தின் சீட்டுக்கு அடியில் கட்டு கட்டாக ரூ.31 லட்சம் பணம் இருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து பணத்தை பறிமுதல் செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சென்னை சின்ன மாத்தூர் மாதவரம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் மற்றும் சென்னை ராயபுரம் கிரேஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்த மதிவேல் என்பதும், இவர்கள் இருவரும் பாரிமுனையில் செல்போன் கடை வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இவர்கள் கொண்டு வந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அப்பணம் வருமானவரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.