\
கண்காட்சிக்கு கொண்டுவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்

கண்காட்சிக்கு கொண்டுவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்

கண்காட்சிக்கு கொண்டுவந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார்
Published on

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட 13 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், நாடுமுழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வந்த வேன் ஒன்றை மடக்கி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணங்கள் இல்லாததால் நகைகளை பறிமுதல் செய்து, பறக்கும் படை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். 

பின்னர் உரிய ஆவணங்களை கொண்டு வந்து சமர்ப்பித்ததால் நகையுடன் வந்த வேனை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் விடுவித்தனர். தேர்தல் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வைர நகை கண்காட்சிக்காக டெல்லியில் இருந்து சென்னை கொண்டு வந்துவிட்டு தற்போது மீண்டும் டில்லி கொண்டு செல்வது தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com