இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்: 10,000 போலீசார் பாதுகாப்பு

இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்: 10,000 போலீசார் பாதுகாப்பு

இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவல்: 10,000 போலீசார் பாதுகாப்பு
Published on

இளைஞர்கள் போராட்டம் நடத்தப்போவதாக சமூக வலைதளங்கள் மூலம் தகவல் பரவியதால் சென்னை மாநகர் முழுவதும் 10,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இளைஞர்கள் போராட்டம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலம் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில், 500 அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக நலக்கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை போலீசார் வாடகைக்கு எடுத்துள்ளனர். தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com