\
’ஓபிஎஸ்ஸை ஏற்காவிட்டால் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’ - மர்மநபர் மிரட்டல்

’ஓபிஎஸ்ஸை ஏற்காவிட்டால் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’ - மர்மநபர் மிரட்டல்

’ஓபிஎஸ்ஸை ஏற்காவிட்டால் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’ - மர்மநபர் மிரட்டல்
Published on

அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஓ. பன்னீர்செல்வம் ஏற்கப்படாவிட்டால் சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து இரண்டு ரயில் நிலையங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com