\
சாலை விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை – போராடி மீட்ட காவலர்

சாலை விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை – போராடி மீட்ட காவலர்

சாலை விபத்தில் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியை – போராடி மீட்ட காவலர்
Published on

இருசக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை மீது எதிரே வந்த இருசக்கர வாகனம் மோதியதில், ஆற்றில் தூக்கி வீசப்பட்ட ஆசிரியையை போராடி மீட்ட காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மகிழஞ்சேரி ஆதிலட்சுமி நகரைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவாரின் மனைவி உஷா. இவர், நன்னிலம் அருகே ஆணைக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பணங்குடி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த முகமது நிசாருதீன் என்பவர் ஆசிரியர் உஷா மீது மோதியுள்ளார். இதில் உஷா, அருகில் இருந்த ஆற்றில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதையடுத்து ஆற்றில் தண்ணீர் அதிகமாக இருந்ததால் தத்தளித்து உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக வந்த நன்னிலம் காவலர் செல்வேந்திரன் என்பவர் ஆற்றில் குதித்து ஆசிரியரை பத்திரமாக மீட்டு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஆற்றில் உயிருக்கு போராடிய ஆசிரியரை, தன் உயிரை துச்சமென நினைத்து காப்பாற்றிய காவலர் செல்வேந்தரனுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com